செவ்வாய், 15 மார்ச், 2016

சிக்கன் விருந்து (அறுசுவை ஞாயிறு )

அம்மாவின் கைமணம்(சண்டே ஸ்பெஷல் )


 சிக்கன் கிரேவி 

                சிக்கன், மட்டன் என அசைவ சமையல் என்றாலே பெரும்பாலோனோருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அம்மாவின் கையால் நமக்காகவே சமைக்கப்படும் போது அதன் ருசியே அலாதியனதாக மாறிவிடும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை  என் அம்மா வீட்டுக்கு சென்றிருந்தேன்.என்ன சமைக்க எனக் கேட்டு விட்டு சிக்கன் கிரேவி,   மட்டன் குழம்பு, முட்டை, சூப் என எனக்கு பிடித்த அனைத்துமே  சமைத்து பரிமாறினார்கள் . காலையில் சாப்பிட்டு விட்டு சென்றிருந்தும் அம்மாவின் சமையல் வாசம் மூக்கை துளைக்க 11 மணிக்கே பசிக்க ஆரம்பித்து விட்டது.


                                                            சிக்கன் கறி
                                                 
                                                  சிக்கன் கறி வாங்கும் போது ஒவ்வொருவர் கழுத்து கறி, சிலர் தோல் இல்லாத கறி என வாங்குவர். பெரும்பாலும் பலர் வாங்குவது லெக் பீசாக இருக்கும். நாங்கள் சிக்கன் வாங்கும் போது லெக்பீசாக வாங்கி அதனை வெட்டி, ஈரலுடன் சேர்த்து வைக்க சொல்லி வாங்குவோம். இதை பலர் சிக்கன் பவுடர், சோளமாவு, முட்டை கலந்து எண்ணையில் பொரித்து எடுப்பர். ஆனால் எங்கள் வீட்டில் எப்போதுமே எண்ணையில் பொரிக்க மாட்டோம். மாறாக என் அம்மா சிக்கனுடன் வெள்ளைபூண்டு, வெங்காயம், இஞ்சி பேஸ்ட் சேர்த்து அதனுடன் வீட்டில் அவர்களே தயாரித்த மிளகாய்த்தூள், மசாலாத்தூளுடன் சிறிது தேங்காயும் அரைத்து ஊற்றி இந்த சிக்கன் கிரேவி செய்வார்கள்.  சிக்கன் இல்லாமலேயே இந்த கிரேவியை மட்டும் சாதத்தில் அல்லது சப்பாத்தி, பரோட்டாவுடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நானும் பலமுறை இதை செய்ய முயற்சித்ததுண்டு, ஆனால் அம்மாவின் கை ருசியில் இருப்பது போல் வரவேயில்லை .



 மட்டன் சூப்
                                               
                                                   முதலில் சுடச் சுட சூப்பை ஊதி ஊதி குடித்தேன் சூப்பை ருசி பார்த்தவுடன் சாப்பிடும் ஆர்வம் அதிகமாகியது .
                                              பொதுவாக கறிக் குழம்பின் ருசி நாம் குடிக்கும் சூப்பிலேயே தெரிந்து விடும். அது நன்றாக இருந்தால் அன்றைய குழம்பும் சுவையானதாகவே  இருக்கும்.


                                                            மட்டன் குழம்பு
                                                               
                                                               கறிக்  குழம்பில் சிலர் காய்கறிகள் போடாமல் வைப்பர்.  அது ஒரு வித சுவையாக இருக்கும். ஆனால் என் அம்மா சமைக்கும் போது கத்தரிக்காய், மொச்சை, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் என அந்தந்த  சீசனில் கிடைக்கும் காயை கறியுடன் சேர்த்து சமைப்பார்கள். கறியோடு கிடக்கும் உருளைக்கிழங்கு கறியை விட சுவையானதாக இருக்கும். நான் அதில் இருக்கும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுவேன்.  கறி கிரேவியுடன் உருளைக்கிழங்கை சேர்த்தாலும் மிகவும் சுவையாக இருக்கும். அத்தோடு பலாப்பழ சீசனில் பலாக்கொட்டையை கறியுடன் போட்டு குழம்பு வைப்பார்கள், குழம்பின் சுவையே வித்தியாசமாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும் .

                                               அறுசுவை விருந்து தட்டில்
                                             
                                     
                                                     மட்டன் குழம்புக்கு மட்டன் வறுவலை விட என் அம்மா செய்த இந்த சிக்கன் கிரேவி, முட்டை அதனுடன் குழம்பில் போட்ட மொச்சை, உருளைக்கிழங்கு சேர்த்து சாப்பிட, இந்த சுவை எங்குமே காணக் கிடைக்காததாக எனக்குத்  தோன்றும். நீங்களும் உங்கள் அம்மா கையால் சாப்பிட்ட சுவையை நிச்சயம் உணர்ந்திருப்பீர்கள் ....







                                                                                                         

                                                                                                                                                                                                                                                                                             அம்மாவின் கைமணம்     
                                                               தொடரும்...

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன