இனிய சிறுமலை பயணம் 2
இந்த பதிவை வாசிக்கும் அனைத்து தோழ தோழியருக்கும் என் இனிய வணக்கம். சென்ற பதிவில் நாம் சிறுமலையை பற்றிய அறிமுகத்தையும் சுற்றிலுமுள்ள ஊர்களின் பெயர்களையும் பார்த்தோம். இந்த பதிவில் ...
அகஸ்தியர்புரம்
இந்த இடம் சிறுமலை புதூருக்கு அடுத்தபடியாக வெள்ளிமலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு அகஸ்திய ஆசிரமம் ஒன்று சுற்றிலும் வனத்திற்கு நடுவே அமைதியான இடத்தில அமைந்துள்ளது. இவ் ஆசிரமத்தில் ஸ்ரீ சத்குரு சாது கிருஷ்ணசாமி என்ற சிவனடியாரின் ஜீவ சமாதி உள்ளது. இவர் இங்கே லிங்கத்துக்குள் பார்வதி கொலு வீற்றிருக்கும் சிலையை வைத்து வழிபட்டு வந்திருக்கிறார் .
லிங்கத்துக்குள் பார்வதி
லிங்கதுக்குள் பார்வதி இருக்கும் சிலை மிகவும் தத்ரூபமாகவும் பார்ப்பவர்களை பக்தியுடன் கை கூப்ப வைக்கும் தோற்றத்துடனும் அமைந்துள்ளது. இங்கே தினமும் காலை 10.30 to 2.30 வரை அன்னதானம் நடைபெறுகிறது. இதற்கு பக்தர்கள் பெருமளவில் பொருளுதவி செய்கின்றனர்.
ருத்ராட்ச மரம்
சுற்றிலும் வனத்திற்க்கு நடுவே தானாக வளர்ந்த பூஞ்செடி கொடிகளுடன் மௌனலயமாக உள்ள இந்த ஆசிரமத்தில் காண்பதற்க்கு அறிய இரண்டு முக ருத்திராட்ச மரம் காணப்படுகிறது. மேலும் இங்கே ஜோதி இலை செடிகள் நிறைய உள்ளன. இந்த இலையை விளக்கில் திரிக்கு பதிலாக வைத்து தீபம் ஏற்றினால் நீண்ட நேரம் பிரகாசமாக ஜோதி கண்ணை குளிர்விக்கிறது. இங்குள்ள மக்கள் இதன் மகிமையை அறிந்து பெரும்பாலும் திரிக்கு பதிலாக இந்த இலையையே பயன்படுத்துகின்றனர்.
அகஸ்தியபுரத்தில் 30 வீடுகள் வரை உள்ளன. இங்கு தென்மலை வரை குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி உண்டு. இங்குள்ள மக்கள் சுற்றிலும் இயற்கைக்கு நடுவே அமைதியாக வாழ்கின்றனர்.
தொடரும் ....
அடுத்த பதிவில் ...
வெள்ளிமலை (சிறுமலை)
VERY INTERESTING STORY
பதிலளிநீக்குநன்றி
நீக்குNice Going... Well Done...
பதிலளிநீக்குI am expecting the next part....
பதிலளிநீக்குthank you, coming soon next part
நீக்குNice and useful info.
பதிலளிநீக்குI appreciate ur effort and interest.in every article you try to put more unknown information and ensure it's true ness.great work.welldone
பதிலளிநீக்குthanks for your comments karthik
நீக்குInteresting place . Eagerly waiting for upcoming parts.
பதிலளிநீக்குthank u for your comments & encouraging words madam,next part is coming soon....
நீக்குI am eagerly expecting next part about Sirumalai
பதிலளிநீக்குI am eagerly expecting next part about Sirumalai
பதிலளிநீக்குsirumalai 4 parts completed for 1 year ago, you see the older post sir....
நீக்குthanks for your comments sir....
பதிலளிநீக்கு