வியாழன், 12 நவம்பர், 2015

சிறுமலைக்கு போவோமா ?

இனிமையான சிறுமலை பயணம்


சிறுமலை

                யற்கையை அள்ளிபருகும்  விழிகளோடு எளிமையும் இனிமையும் கலந்த மனதுடன் பயணம் செய்ய விரும்புபவர்கள் செல்ல வேண்டிய இடம் திண்டுக்கல் மாவட்டத்திலுள சிறுமலை ஆகும்.திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 1 மணி நேர பயண தூரத்தில் (25km )18 கொண்டை ஊசி வளைவுகளுடன் சிறு மலையாகும் .சுற்றுலா பயணிகள் அதிகம் சஞ்சரிகாத இடமாதலால் சுற்றுபுறத்  தூய்மையுடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது .
     
     திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இருந்து 5km தூரம் சென்றால் வாழக்காப்பட்டிக்கு அடுத்ததாக சிறுமலை பிரிவு  ரோட்டில் சிறிது தூரம் சென்றால் சிறுமலை அடிவாரம் ஆரம்பிக்கிறது.இங்கு வனத்துறை செக்க்போஸ்ட் ஒன்று உள்ளது .இங்கிருந்தே சிறுமலை பயணம் ஆரம்பிக்கிறது .1992,94,98 ல் சிறுமலைக்கு அதிகளவு பஸ் வசதி இல்லை .தற்போது பொது மக்களின் வசதிக்காக இங்கு செல்வதற்கு 45 to 1 மணி நேரத்திற்க்கு ஒருமுறை அரசு மற்றும் தனியார் பஸ் இயங்குகிறது .இந்த பஸ் திண்டுகல்லில் இருந்து சிறுமலையில் உள்ள தென்மலை வரை பயணிக்கிறது .
              
              டிவாரத்தில் இருந்து  பஸ்சில் செல்லும் போது சுற்றிலும் உள்ள இயற்கை காட்சிகளை ரசித்தபடியே சென்றால் சிறுமலையில் முதலில் நாம் அடையக்கூடிய நிறுத்தம் அண்ணா நகர் .அடுத்ததாக பழையூர் ,புதூர் ,அகஸ்தியபுரம் ,வெள்ளிமலை சிவன் கோவில் உள்ளது .சிருமலையை சுற்றி தாளகடை ,வேளான்காடு ,அரளகாடு ,கடமான்குளம் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன.இதில் தாளகடைக்கு பஸ் வசதி இல்லை .ஆதி வாசிகளான பூர்வ குடிகள் இங்கு தென்மலை ஊரணி ,பொன்னருவி ,சிறுமலை புதூர் ,தொழுக்காடு  பகுதிகளில் காட்டுக்குள் குடிசை போட்டு வசிகின்றனர் .
            
               இம்மலைக்கு போகும் வழியில் கருப்ப சாமி மற்றும் மாதா கோவில்கள் உள்ளன .சிறுமலையில் சாத்தையாறு மற்றும் சந்தானவர்தினி ஆறுகள் உற்பத்தியாகின்றன .இம்மலை பகுதியில் உள்ள தாளகடை வழியாக காட்டுக்குள்  நடந்து சென்றால் மதுரை வாடிபட்டியை அடையலாம் .

                   இதனை பற்றியும் மற்ற சுற்றி பார்க்கும் இடங்களை பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம் .

                                                                                                                             தொடரும் .....

13 கருத்துகள்:

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன