சைவ பரோட்டா
சைவ பரோட்டா குருமாவுடன்
ஹோட்டல் வெளிப்புறம்
ஹோட்டல் உள்ளே
சைவ பரோட்டா
இட்லி சாம்பார்
மொறு மொறு பூரி
பரோட்டா பார்சல்
தொடரும்....
பரோட்டா சைவத்தில் சாப்பிடுவதை விட நிறைய பேருக்கு அசைவத்தில் சாப்பிடவே அதிகம் பிடிக்கும் என்றாலும் இந்த வாரம் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்காக இந்தப் பதிவு .......
சைவ பரோட்டா குருமாவுடன்
அன்று செவ்வாய்க் கிழமை கோவிலுக்கு போய் விட்டு திரும்பும் போது சைவக் கடையில் பரோட்டா பார்சல் வாங்கலாம் என முடிவு செய்தோம். சைவ ஹோட்டல் திண்டுக்கல்லில் நிறைய இருந்தாலும் இந்த வாரம் அபிராமி அம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஆர்யாஸ் உயர்தர சைவ உணவகத்தை தேர்ந்தெடுத்தோம் . இங்கு பரோட்டா, இட்லி பார்சலுக்கு டோக்கன் பெற்றுக் கொண்டு சுற்றிலும் பார்த்தபடி அமர்ந்தோம். ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்திருப்போர் தோசை, பரோட்டா என சாப்பிட்டுக் கொண்டும், பார்சல் வாங்கி கொண்டும் இருந்தனர். எங்களுக்கும் சிறிது நேரத்தில் பார்சல் பண்ணி கொண்டு வந்து தந்தனர்.
இந்த ஹோட்டல் ஆர்யாஸ் சைவ உணவக கிளைகள் நிறைய இடங்களில் உள்ளது. திண்டுக்கல்லிலேயே பஸ் ஸ்டான்ட் அருகிலும் மற்றைய சில இடங்களிலும் இதன் கிளை உணவகங்கள் இருக்கின்றன .நாங்கள் பார்சல் வாங்கிய ஹோட்டல் கிளையில் முன்புறம் காபி, டீ, சைனீஸ் உணவுகள், சில்லி பரோட்டா உள்ளிட்டவை சமைத்து தரப்படுகிறது.
ஹோட்டல் உள்ளே
ஹோட்டல் உள்ளே நல்ல விசாலமான அமைப்புடன் சுத்தமாக உள்ளது. ஹோட்டல் பணியாளர்கள் சீருடை அணிந்து வேலை செய்கின்றனர்.
சைவ பரோட்டா
பரோட்டாவுக்கு இங்கே இரண்டு வகை குருமா தருகின்றனர். குருமாவில் சேர்ந்த காய்கறிகளும், அதனோடு மிதக்கும் வெங்காயமும் ஊறி பரோட்டவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக உள்ளது. இதனோடு தயிர் வெங்காயமும் ஒரு கவரில் கட்டித் தருகின்றனர்.
இட்லி சாம்பார்
வாழை இலையில் இரண்டு இட்லிகளுடன் சாம்பாரும், சட்னியும் வைத்து பார்சல் செய்திருந்தனர் .
மொறு மொறு பூரி
சைவமாக மட்டுமே சாப்பிடுவோருக்கு இங்கு பரோட்டா, சப்பாத்தி, பூரி அதனோடு ஊற்றிக் கொள்ள குருமா, வெங்காயம் நன்றாக உள்ளது. அசைவத்தில் பரோட்டா, சால்னா விரும்புவோரும் இந்த சைவ பரோட்டா, குருமா ஒரு முறை சுவைத்துப் பாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன