செவ்வாய், 22 மார்ச், 2016

டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழா 

                                        கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒவ்வொரு வருடமும் அப்பள கடை இடம்பெறாமல் இருந்ததே இல்லை. கோவிலுக்கு வரும் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து முடித்தவுடன் மைதானத்தில் இருக்கும் கடைகளை சுற்றி பார்த்து விட்டு அவரவருக்கு தேவையான பொருட்களை வாங்கியானதும் படையெடுப்பது அப்பள கடைக்குத்தான். கோவிலுக்கு வரும் பெரும்பாலான மக்கள்  அப்பளம் வாங்காமல் சென்றதில்லை. அந்தளவுக்கு அப்பளம், மிளகாய் பஜ்ஜி கடைகள் இங்கு பிரபலம். அப்பளம், பானிபூரி, காலிபிளவர் பக்கோடா என வாங்கி மைதானத்தில் தாங்கள்  கொண்டு வந்த விரிப்பை விரித்து அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே  கொறித்துக் கொண்டிருப்பர் .


                                                     அப்பளக்கடை

                                                     மிளகாய் பஜ்ஜி

                                                  காலிபிளவர் பக்கோடா


                                             அப்பளம், பஜ்ஜி வாங்கிய போது
                                                      மிளகாய் பஜ்ஜி          


                                                       பானி பூரி


                                                      பேல் பூரி

                                      இங்குள்ள அப்பள கடைகளோடு பானி பூரி, பேல் பூரி மசாலா பூரி, மசாலா சுண்டல்  போன்ற வகைகளும் இங்கே பரபரப்பாக விற்பனையாகிக்  கொண்டிருக்கும் .


                               மாவிளக்கு நாங்கள் போட்ட போது எடுத்த படம்

                                               இந்தக் கோவிலில் உள்ளூர் மக்களில் இருந்து வெளியூர் மக்கள் வரை அனைவரும் ஒரு நாள் இங்கு வந்து அம்மனுக்கு மாவிளக்கு இட்டு தேங்காய், பழம் உடைத்து பூஜை செய்வர்.  சிலர் தங்கள் குடும்பத்தாருக்கு எந்த பிணியாக இருந்தாலும் அது தீர வேண்டும் என்பதற்காக   மாவிளக்கு வைப்பதாக வேண்டுவர். அதன் படியே குடும்பத்தாருடன் வந்து அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப கண்ணில், வயிற்றில் என மாவிளக்கை இலையிடன் வைத்து எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். பெரும்பாலான மக்கள் கொடி இறங்குவதற்கு முன்னரே  இந்த மாவிளக்கு நேர்த்திக் கடனை செலுத்தி  விடுவர்.


                                                     மாவிளக்கு போடும் பக்தர்கள்

                                              வேண்டுதல் மாவிளக்குகள்

                                                  தீச்சட்டி வேண்டுதல்கள்

                                              திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. பக்தர்கள் வேண்டும் வரம் தரும் இந்த கோட்டை மாரியம்மனை நீங்களும் ஒரு முறை தரிசித்து விட்டு செல்லுங்களேன் .
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன