இனிய சிறுமலை பயணம் (பாகம்-4)
வெள்ளிமலை சிவலிங்கம்
சிவபூஜை செய்யும் சிவனடியார்
சிவலிங்கமும் எதிரே நந்தியும்
சிவலிங்கம் அருகே ஆஸ்பெட்டாஸ் கூரையில் ஒரு பக்தர்
வணக்கம் நட்புக்குரிய உள்ளங்களே , சென்ற பதிவில் வெள்ளிமலை அடிவாரத்திலிருந்து மலை ஏறும் அனுபவத்தை எழுதியுருந்தேன் .அதை படித்து ஆதரவளித்த அணைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . இந்த பதிவில் .....
வெள்ளிமலை சிவன் தரிசனம் (சிறுமலை)
இயற்கையை ரசிப்பவர்களுக்கு மலை ஏற்றம் என்பது ஒரு இனிமையான அனுபவம்தான் .அவ்வாறு நாங்கள் ரசித்துக் கொண்டே மலை ஏறி முடித்ததும் ஆவலாக பார்க்க முதலில் காணப்படுவது கருப்பண சாமி மற்றும் முருகன் கோவில்கள் .இரு வேறு கோவில்களும் இருபுரத்திலே அமைந்திருக்க நடுவே பெரிய நெல்லி மரத்திற்க்கு அடியே சிவலிங்கம் வீற்றிருக்கும் அற்புத தரிசனம் கிடைக்கிறது.சிவனுக்கு எதிரே நந்தியும் கொடிமரமும் காட்சியளிக்கிறது.
சிவபூஜை செய்யும் சிவனடியார்
சுற்றிலும் பரந்து விரிந்த இயற்க்கைக்கு நடுவே மரத்தையே மேற்கூரையாகக் கொண்டு சிவபெருமான் அமைதியாக காட்சியளிக்கிறார் . இங்கே செல்லும் அனைவருக்குமே அமைதியும் சிவனாரின் அருளும் கண்டிப்பாக கிடைக்கும்.இம்மலையில் சிவனுக்கு அபிடேக,ஆராதனைகளை நடத்த ஒரு சிவனடியார் இருக்கிறார். பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களைக் கொண்டும் ,அடிவாரத்தில் இருக்கும் ஊற்று நீர் தீர்த்தத்தைக் கொண்டும் பூஜைகள் செய்கிறார் .
இம்மலைக்கு சிவனடியார்கள் அடிக்கடி வந்து வெள்ளி மலையானை தரிசித்து செல்கின்றனர்.மேலும் இங்கே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் சூட்சும வடிவத்தில் சிவனை வழிபட்டு செல்வாதகவும், உருவமில்லாத வன தேவதைகள் இம்மலையை காப்பதாகவும் நம்பப்படுகிறது. மலை அடிவாரத்தில் விநாயகர் மற்றும் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றனர் .
வெள்ளிமலை சிவனை சுற்றிலும் பசுமையான மரங்களும் ஆங்காங்கே உட்காருவதற்க்கு வசதியாக திட்டு போல் பாறைகளும் அமைந்துள்ளன. சிவலிங்கம் அருகே நிழலுக்கு ஆஸ்பெடாஸ் கூரை போடப்பட்டுள்ளது. இந்த மலையிலிருந்து பார்த்தால் எதிரே தென்மலை ஆரம்பம் தெரிகிரது .மலையை சுற்றிலும் வீசிய சிலு சிலுவென்ற காற்றும்,அதில் உதிரும் மரங்களின் இலைகளும் ,சிவலிங்க தரிசனமும் எங்களுக்கு மெயசிலிர்ப்பையும், மறக்க முடியாத அனுபவத்தையும் ஏற்படுத்தியது.
சிவலிங்கத்தை சுற்றி உள்ள காட்சிகள்
இயற்க்கை ஆர்வலர்கள், ஆன்மீக பயணிகள் முதலாக அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் வெள்ளிமலை சிவன் கோவிலாகும். இப்பயணம் உங்களுக்கும் நிச்சயம் ரசிக்க கூடியதாகவும் ,ஆன்மீக அதிர்வுகளை உனரச் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.
எந்தவித ஏமாற்றமும் இல்லாமல் வழக்கம் போல இன்றும் படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது உங்களது படைப்பு... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நீக்குVERY NICE PLACE PA
நீக்கு