அபியின் பயணங்களில்: சிறுமலைக்கு போவோமா ? (3):
இனிய சிறுமலை பயணம் (பாகம் 3)
வெள்ளிமலை சிவன் கோவில் (சிறுமலை)
சதுரகிரி ,கொல்லிமலை ,கோவையில் உள்ள வெள்ளிமலை அளவுக்கு இந்த இடம் ஆன்மீக மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாதலால் பசுமை மாறாமல் காட்சியளிகிறது .பிளாஸ்டிக் குப்பைகள் ,கழிவுகள் ஏதுமின்றி ஆன்மீக அதிர்வுடன் உள்ளது.வெள்ளிமலைக்கு நாங்கள் சென்ற போது கீழே அடிவாரத்தில் உள்ள அகஸ்திய ஆசிரமம் சென்று லிங்கத்துக்குள் பார்வதியை வழிபட்டு விட்டு மேலே ஏற ஆரம்பித்தோம் .
அடுத்த பதிவில் ....
வெள்ளிமலை சிவன் தரிசனம்
தொடரும் .......
இனிய சிறுமலை பயணம் (பாகம் 3)
வெள்ளிமலை சிவன் கோவில் (சிறுமலை)
சதுரகிரி ,கொல்லிமலை ,கோவையில் உள்ள வெள்ளிமலை அளவுக்கு இந்த இடம் ஆன்மீக மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் அறியப்படாத இடமாதலால் பசுமை மாறாமல் காட்சியளிகிறது .பிளாஸ்டிக் குப்பைகள் ,கழிவுகள் ஏதுமின்றி ஆன்மீக அதிர்வுடன் உள்ளது.வெள்ளிமலைக்கு நாங்கள் சென்ற போது கீழே அடிவாரத்தில் உள்ள அகஸ்திய ஆசிரமம் சென்று லிங்கத்துக்குள் பார்வதியை வழிபட்டு விட்டு மேலே ஏற ஆரம்பித்தோம் .
வெள்ளிமலை செல்லும் பாதை
வெள்ளிமலை கோவில் அடிவாரத்தில் இருந்து பார்க்கும் போதே மேலே லிங்க வடிவத்துடன் மலை ஏறி பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வண்ணம் காட்சியளிக்கிறது .இம்மலையில் படிகள் அதிகமாக இல்லாது சுற்றிலும் செம்மண் பாதையாக வளைந்து வளைந்து மேலேறி செல்கிறது .சில இடங்களில் படிகள் உயரமாகவும் ,மேலே ஏற ஏற வெயில் சுட்டெரித்தாலும் சுற்றிலும் உள்ள இயற்கை காட்சிகளும் ,காற்றும் மனதை குளிர்விக்கிறது .
மலை ஏறும் வழியில் உள்ள கருப்பு கோவில்
மலை ஏறும் பாதை
அமைதியான இம்மலையில் மேலே கடைகள் ஏதும் இல்லாததால் நாங்கள் கீழேயே எங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் கையோடு கொண்டு சென்றிருந்தோம். ஏறும் பாதை சற்று உயரமாதலால்,வெயிலுடன் சேர்ந்து தண்ணீர் தாகம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது .இப்போது நாங்கள் அடிவாரத்திலிருந்து பல நூறு மீட்டர் உயரத்தில் இருந்தோம்.இங்கிருந்து அடுத்த திருப்பம் திரும்பியதும் சுற்றிலும் திறந்த வெளியில் மரத்துக்கு அடியில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது .
மலை ஏறியதும் சிவலிங்க தரிசனத்துடன் சுற்றிலும் ஓம் என்ற ரீங்கார ஒலியுடன் காற்று பலமாக அடித்தது.அதனுடன் மணி அசைந்த ஓசையும் சேர்ந்து நம்மிடம் ஆன்மீக அதிர்வலைகளை ஆழமாக தோற்றுவித்தது.
அடுத்த பதிவில் ....
வெள்ளிமலை சிவன் தரிசனம்
தொடரும் .......
vellimalai interesting article
பதிலளிநீக்குhttp://thefatburningbiblereview.com/
பதிலளிநீக்குTurmeric is packed full of health benefits and tastes great too! Just 2 tsp a day can give you an wealth of benefits. Check out the benefits and how to incorporate it into your diet!
http://edreverserbookreview.com/
அருமை
பதிலளிநீக்குஅழகிய இடம்.
பதிலளிநீக்குஅழகிய இடம்.
பதிலளிநீக்குநன்றி...
நீக்கு