புதன், 17 பிப்ரவரி, 2016

மனம் மகிழும் திருவிழா

மாரியம்மன் திருவிழா கடைகள் 

                                     திண்டுக்கலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழா 15 நாட்கள் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பே கடைகள், வித விதமான ராட்டினங்கள் என அனைத்தும் இடம்பெற்று விடும் .இவை திருவிழா முடிந்த பின்னரும் 1 மாதம் வரை இருக்கும் .திண்டுக்கல் மக்களுக்கு இந்த திருவிழா பக்தியோடு பொழுதுபோக்கு அம்சத்தையும் தருகிறது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை வேளை வந்து விட்டால்  கூட்டம் அலைமோதும் . எல்லா மதத்தினரும் இங்கு வந்து செல்வர் .  சுற்றிலுமுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்கள் சாப்பாடு கட்டிக் கொண்டு குழுவாக வருவர். இவர்கள் அம்மனை தரிசித்துவிட்டு கோவில் மைதானத்திலேயே தங்கி  சாப்பிட்டு விட்டு இரவு முழுவதும் அங்கே நடக்கும் வேடிக்கைகளை கண்டுகளித்தபடி இருந்து  விட்டு காலையில் செல்வர். பெரும்பாலும் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளும் போது இந்த கூட்டம்  அதிகம் இருக்கும்.

இதோ உங்கள் பார்வைக்கு சில படங்கள் ...                                                வீட்டு  உபயோக பொருட்கள் 

                                                பல வகை கரண்டி,தட்டுக்கள் 
                                         
                                                        விளையாட்டு பொருட்கள் 

                                           குழந்தைகளுக்கான பொம்மைகள் 

                                                அலங்கார பொருட்கள் கடை 

டெல்லி அப்பள கடை 

                                             கலர் கலராக மின்னும் குருவிகள் 

                                                       தற்காலிக டீஷர்ட் கடை 

                                             பால் மற்றும் தண்ணீர் விற்பனை

அம்மன் அலங்காரத்தில் .....

                                           தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் 

                                               சீரியல் விளக்கில் மாரியம்மன் 

                                                      மின்னும் அலங்கார தேர் 

                              குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் ராட்டினங்கள் மற்றும் விளையாட்டுகள் கோவில் உள் மைதானத்திலும், கோவிலுக்கு பின்புற வெளி மைதானத்திலும் அமைகப்பட்டிருக்கும் .

அவற்றில் சில ....

                                            நீரில்  விளையாடும் குழந்தைகள் 

குழந்தைகள் குதித்து விளையாட 

                                               ஜெயின்ட்வில்லில் ஏறும் வழி  

                                                          தாலாட்டும் போட் 

                                                  குடை ஸ்டைலில் ராட்டினம் 

                                           தண்டவாள ரயில்களில் நகர்வோர் 

                                 இக்கோவிலில் காலையில் கோவில் கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றுவோரும்,பால் குடம் எடுப்போரும் அதிகம் இருப்பர் .ஆனால் காலையை விட மாலை வேளைகளில்  குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகம் காணப்படுவர். அவரவர் விருப்பத்திற்கேற்ப சுவாமி  தரிசனம் செய்து விட்டு அப்பளம், பானி  பூரி, ஐஸ் க்ரீம்  என  வாங்கி உண்டு  விட்டு கடைகளில் பொருட்களை வாங்குவதும் , ராட்டினத்தில் ஏறுவதுமாக பொழுது நகரும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன