இந்த வாரம் பரோட்டா பார்சல் பகுதியில் அதிகமானோர் விரும்பும் முட்டை பரோட்டா பற்றிய பதிவு .....
முட்டை பரோட்டா
பரோட்டா மாவை தேய்த்து அதை ஒரு வீசு வீசி சட்டியில் போட்டு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அப்படியே அதன் ஓரங்களை மூடி வேகவிட்டு சற்று பொன்னிறமானதும் எடுத்து தட்டில் போட முட்டை பரோட்டா ரெடியாகிறது. பரோட்டாவை வீசி முட்டையை உடைத்து ஊற்றும் போதே நமக்கு இங்கே பசியோடு சாப்பிட தோன்றுகிறது. பசுமையான வாழை இலையில் முட்டை பரோட்டாவை வைத்து தொட்டுக் கொள்ள 2 வகை சால்னாக்களுடன் பார்சல் கட்டித் தருகின்றனர் .
இரண்டு வகை சால்னா
வீட்டுக்கு வந்தவுடனே ஆவலாக பரோட்டாவை பிரித்து சால்னா இல்லாமலே ஒரு வாய் சாப்பிட சுவை சூப்பர் . பின் முட்டை பரோட்டாவை குடும்பத்துடன் ஆளுக்கு ஒன்றாக பங்கு போட்டு சால்னாவுடன் சுவைத்தோம். இரண்டு முட்டைகளை சேர்த்து கலக்கி ஊற்றியது போல பரோட்டாவில் முட்டை அதிகமாக பரந்திருந்தது.
சால்னாவுடன் முட்டை பரோட்டா
முட்டையில் உள்ள மஞ்சள் கருவை பரோட்டாவுடன் சேர்த்து பிசைந்து சால்னாவுடன் சாப்பிடும் போது சுவை கூடித் தெரிகிறது என அனைவரும் கோரஸாக சொல்ல சிரிப்பும் விளையாட்டுமாக அன்றைய பொழுது சென்றது. பரோட்டாவுக்கு இங்கே வெள்ளைக் குருமாவுடன் இன்னொரு வகை கார குழம்பும் தருகின்றனர்.
சாதா பரோட்டா
முட்டை பரோட்டாவோடு சேர்த்து சாதா பரோட்டாவும் பார்சல் வாங்கியிருந்தோம். பரோட்டா வட்டமாக பொன்னிறத்துடன், சற்று எண்ணெய் பசையுடன் கூடிய தோற்றத்துடன் பார்ப்பதற்க்கும், சாப்பிடுவதற்க்கும் நிறைவாக இருந்தது..
சால்னாவில் ஊறிய பரோட்டா
சாதா பரோட்டாவை இரண்டு வகை சால்னாவுடன் ஊற வைத்து சாப்பிடும் போது சால்னாவின் மணமும், பரோட்டாவின் சுவையும் இணைந்து சாப்பிட நன்றாக இருந்தது .
பரோட்டா பார்சல்
தொடரும் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன