சனி, 8 அக்டோபர், 2022

சாப்பிட சாப்பிட மணக்கும் நாகல் நகர் சமோசா


                              வணக்கம் உறவுகளே, இந்த வாரம் நமது பதிவில் சுடச்சுட சமோசா சாப்பிடுவோமா? பொதுவாகவே ஒவ்வொரு ஊரிலும் சில உணவுப்  பண்டங்கள் (நொறுக்குத்  தீனிகள்)சிறப்பானதாக இருக்கும். அதில் சிலவற்றை சொல்வதானால் கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் சேவு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா என சொல்லிக்கொண்டே போகலாம். இதைப்போல திண்டுக்கல் மாநகராட்சியை எடுத்துக்கொண்டால் பிரியாணி சிறப்பான ஒரு உணவு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. வேணு பிரியாணி, தலப்பாக்கட்டி பிரியாணி இன்னும் பல பிரியாணி கடைகள். திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள    சிறுமலை வாழைப்பழம் புவி சார் குறியீடு பெற்றதாகும் மற்றும் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் ஹோம் மேட் சாக்லேட் மற்றும் பல.




                                       பொதுவாகவே மாலை நேரத்தில் எல்லோருக்குமே ஏதாவது சிற்றுண்டி சாப்பிட வேண்டும் போல் இருக்கும். அதுவும் வேலை முடிந்து வீட்டிற்க்கு வரும் போது செம பசியாக இருக்கும். அந்த நேரத்தில் எல்லாம் இந்த திண்டுக்கல் நாகல் நகர் ஏரியாவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள தள்ளுவண்டி சமோசா கடையில் சமோசா சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கும் வாங்கிச் செல்வது வழக்கம்.


                                                இங்கு சமோசா ஒன்று நான்கு ரூபாய் என நாம் எவ்வளவு ரூபாய்க்கு கேட்கிறோமா தயாராக வைத்திருக்கும் மாவில் அப்போதே எண்ணெய்யில் பொரித்து சுடச்சுட தருவார்கள். சமோசாவின் உள்ளே வைத்திருக்கும் வெங்காயமும், மொறு மொறு சமோசாவும் இன்னும் இன்னும் என சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும்.


                            பேருந்து நிறுத்தத்திற்க்கு அருகில் இருப்பதால் கட்டிட வேலை செய்து விட்டு வருவோர், அருகில் உள்ள கடையில் வேலை பார்ப்போர், அந்த வழியாக வண்டியில் கடந்து செல்லும் பெரும்பாலோர் அங்கு சமோசா வாங்கி சாப்பிட்டு விட்டு பார்சலும் வாங்கிச் செல்வர்.


                                                             நாகல் நகர் ஏரியாவில் பல வருடங்களாக இந்த தள்ளு வண்டிக் கடை இயங்கி வருகிறது. தினமும் மாலை 5 மணியிலிருந்து இரவு வரை இங்கு சுடச்சுட சமோசா கிடைக்கும். 


                                   பொன்னிறமான முக்கோண வடிவில் உள்ள சமோசாவை சூடாக அடுப்பில் இருந்து எடுக்கும் போதே பசியான மாலை டிபன் நேரத்தில் உடனே  சாப்பிடத் தோன்றுகிறது.


                                        சமோசா மாலை நேரத்தில் மட்டுமல்லாது மதியம் நாம் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளவும் சரியாக இருக்கும். வடை சாப்பிட கடைக்குச்  சென்றாலும் இந்த சமோசாவை பார்த்தவுடன் அதன் மொறுமொறுப்புத் தன்மை உடனே வாங்கி ருசிக்கத் தூண்டும்.


                                சில இடங்களில் சமோசாவில் வெங்காயம் மட்டுமல்லாது, உருளைக்கிழங்கு, காரட் என சேர்த்து செய்திருப்பர். ஆனால் இங்கு பெரும்பாலும் வெங்காயம் மட்டுமே சேர்த்திருப்பர்.


                                              சுவை மிகுந்த சமோசா பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். மற்றுமொரு பதிவில் சந்திக்கலாம்...


















2 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான, தகவல்களோடு சுவையான பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி சார்...

      நீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன