சனி, 15 பிப்ரவரி, 2025

அஹனி கறி

காயல்பட்டிணம் ஸ்பெஷல்
 
 இந்த வாரம் நமது பதிவில்  அஹனி கறி செய்து சுவைப்போமா?
வழக்கமாக நாம் செய்து சாப்பிடும் ஆட்டுக்கறி குழம்பில் இருந்து சற்று மாறுபட்ட சுவையில் செய்து ருசித்தோம்.

தேவையான பொருட்கள்

    1. மட்டன் 1/2 கிலோ
    2. தயிர் 100 கிராம்
    3. சுத்தமான நெய் 75 கிராம்
    4. தேங்காய் எண்ணெய் 75 கிராம்
    5. முந்திரி 50 கிராம்
    6. பாதம் 50 கிராம்
    7. பச்சை மிளகாய் 7
    8. வெங்காயம் 3
    9. இஞ்சிப் பூண்டு விழுது 3 டீஸ்பூன்
    10. ஏலக்காய், கருவா, கிராம்பு, தேவையான அளவு
    11. ரம்பை இலை 2
    12. கொத்த மல்லி இலை 1/4 கப்
    13. புதினா இலை 1/4 கப்



  • கறியை கழுவி விட்டு அதில் பாதி தயிர் வெங்காயம் போட்டு புரட்டி வைக்கவும். பாதம் தோலை நீக்கி விட்டு, முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் 3 இவற்றை அரைத்து வைக்கவும்.
  • பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஏலம், கருவா, கிராம்பு, ரம்பை இலை, தயிர் ஊற்றவும்.
  • அவை பொன்னிறமாக வந்தவுடன் கறியைப் போட்டு, பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை, உப்புப் போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றிக் கலக்கி, கொதித்த பிறகு தீயை குறைத்து 10 நிமிடம் அப்படியே போட்டு விட்டு தீயை அணைத்து விட்டு எடுத்தால் சுவையான அஹனிக் கறி ரெடி.


  • நெய் சாதம், இடியப்பம், ஆப்பத்துடன் இந்த அஹனி கறி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


    ரம்ப இலை நாகர்கோவில் பகுதியில் சர்வசாதாரணமாக கிடைக்கும். இல்லையெனில், பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ளலாம்.



    இந்த வாரம்  நீங்களும் அஹனி கறி செய்து ருசித்து  பாருங்களேன்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன