வெள்ளி, 8 நவம்பர், 2024

உங்கள் நரை முடியை நிரந்தரக் கருமையாக மாற்றும் வேம்பாளம்பட்டை ஹேர் பேக்…

நம்மில் பலருக்கு நரை முடி பிரச்சனை இருக்கும். 

         நரைமுடியை கருமையாக்க பெரும்பாலானோர் ஹேர் டைகளை பயன்படுத்துவர். ஆனால் இந்த ஹேர் டைகளில் உள்ள வேதிப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. மேலும் சில நாட்கள் மட்டுமே நீடிக்கும்.

வேம்பாளம் பட்டை வாங்க...

https://amzn.to/4iuruKv

அதற்கு மாற்றாக நரை முடி பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்தி பார்க்கலாம்.


வேம்பாளம் பட்டை என்பது ஒரு வகை மரத்தின் பட்டையாகும். இந்த பட்டை ஆரோக்கியம் முதல் அழகு சார்ந்த பிரச்சினைகள் வரை என எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் ஒரு அற்புதமான மூலிகை பட்டை ஆகும்.

இதனை ஆங்கிலத்தின் ரத்தன் ஜோட் (Ratan Jot) என்று கூறுவர்.

இந்த வேம்பாளம்பட்டை எண்ணெய் முடி நீளமாக வளரவும், நரையைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பட்டையை எண்ணெயில் சேர்த்ததும் எண்ணெய் நன்கு சிவப்பாக மாறத் தொடங்கும்.




தேவையானவை:

கருஞ்சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்

காய வைத்த மருதாணி இலை - ஒரு கைப்பிடி அளவு

வேம்பாளம் பட்டை - சிறிதளவு

வெந்தயம் - 1 ஸ்பூன்

சுத்தமான தேங்காய் எண்ணெய் - 100 ml



செய்முறை:

  • ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் தேங்காய் எண்ணெய் தவிர, மேற் சொன்ன பொருட்களை அந்தந்த அளவுகளில் எடுத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.
  • பின் ஒரு இரும்புக் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து கடாய் சிறிது சூடானவுடன் அதில் தேங்காய் எண்ணெண்யை ஊற்றி சிறிது சூடாக்கவும்.
  • பின் அதில் நாம் தயார் செய்த பவுடரை சேர்க்கவும்.
  • அடுப்பை சிம்மில் வைத்து அந்தக் கலவை நன்கு கருமையாக மாறும் வரை கிளறவும்.
  • பின் அதை அடுப்பிலிருந்து இறக்கி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும்.
  • மறு நாள் காலை ஒரு பவுலை எடுத்து அதில் வெள்ளைத் துணியை விரித்து அந்தக் கலவையை அதில் விட்டு நன்கு பிழியவும்.
  • பிழிந்த அந்த எண்ணையை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தடவவும்.
  • பின் ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும்.
  • வாரம் இரு முறை இப்படி செய்து வர எவ்வளவு நரை முடி இருந்தாலும் கருமையாக மாறும்.
  • சொட்டையான இடங்களிலும் முடி வளரும்.
பயனுள்ள இந்தக் குறிப்பை நீங்களும் உபயோகப்படுத்தி பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.

வேம்பாளம்பட்டை அமேசான் ஆன்லைனில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன