இதுவரை எழுதப்படாத ஒரு வரலாறு. முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்ற ஒற்றை வரிக்கு உயிர் கொடுத்த ஓவியம் இந்த வீரயுக நாயகன் வேள்பாரி நாவல்...
அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் 10% ஆஃபர் விலையில் உங்கள் வேள்பாரி நாவல் வாங்க...
கிளிக்
https://amzn.to/41jPhH3 பலவித அரிய தகவல்களை உள்ளடக்கிய இந்த சுவாரஸ்யமான நாவலை கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் படிக்க நேர்ந்தது. நாவலின் சில பக்கங்களை வாசித்து கடக்கும் போதே, அடடா இத்தனை நாளும் இந்த வரலாற்று பொக்கிஷத்தை வாசிக்காமல் விட்டு விட்டோமே என வெகுவாகத் தோன்றியது.
நாவலை வாசித்தபடியே பாரியுடனும், கபிலருடனும் நான் பயணித்த போது காடும், மலையும் அதற்கு உயிர் கொடுத்த கதாபாத்திரங்களும், அசுணமா எனும் இசை கேட்டு ஆடும் பறவை, இறகு நாவல் பழம், அறுபதாங் கோழி என அனைத்தும் என் மனத்திரையில் தோன்றி உலா வந்தன.
நாவலின் இறுதி அத்தியாயம் முழுவதும் போரும், அதற்காக வகுக்கப்படும் யுக்திகளும் பாரிக்கு வெற்றியை கொடுத்ததா? எனத் தெரியும் வரை புத்தகத்தை கீழே வைக்கவே தோன்றவில்லை. இறவா வரம் பெற்ற இராவதன் மரணம், திசை வேழர், பொற்சுவை மறைவு(இன்னும் எத்தனையோ சுவாரசியங்கள், நாவலை படித்தால் மட்டுமே புரியும்) என படிக்க படிக்க விறுவிறுப்பு கூடிக் கொண்டே போனது.
நாவலை படித்து முடித்தவுடன் நம் மனதிலும் சொல்ல முடியா ஒரு உணர்வு பரவியது. அன்றாட வாழ்க்கையில் நாம் எத்தனையோ வேலைகளுக்கும், வாழ்க்கைச் சுமைகளுக்கும் இடையே ஓடினாலும் பாரி என்ற பெயர் எங்காவது உச்சரிக்கப்படும்போதே பாரியின் வரலாறு முழுவதும் என் மனக்கண்ணில் படுவேகமாக தோன்றி மறைந்து ஒரு இனிமையான உணர்வு சூழும்.
இத்தனை சுவாரஸ்யம் நிறைந்த நாவலை நீங்களும் வாங்கி வாசித்து புதியதொரு உலகத்துக்குள் நுழைய இங்கே கிளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன