பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 பிப்ரவரி, 2016

திண்டுக்கல் பூ மார்க்கட்

பூ விற்போர் உலகம்
                                                   
                          சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கும் உழைப்பாளிகளின் உலகத்தை பார்க்க வேண்டுமென்று  ஆசைபட்டால் திண்டுக்கல் பூ மார்க்கட்டிர்க்கு  வந்து பாருங்களேன் . நான் சிறு வயதாய் இருந்த போதிலிருந்தே என் அம்மாவுடன் அடிக்கடி பூ மார்க்கட்டிற்கு செல்வேன் .தெருவில் கொண்டு வந்து பூ விற்ப்போரிடம் கிடைப்பதை விட இங்கு விலை சற்று குறைவாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகள் எந்த விழாக்கள்,பண்டிகைகள் என்றாலும் அதற்கு முதல் நாளே இங்கு வந்து பூ வாங்கி செல்வர் .பூக்களை வாங்குவோரும் விற்போரும் பேசும் வாய்ப் போரையும் ,விதவிதமான மலர்கள்  ஆங்காங்கே குவித்து வைக்கப்படிருப்பதையும் பார்ப்பதர்க்காகவே நான் அடிக்கடி அங்கே செல்வேன். அதிலும் வண்ண வண்ணமான ரோஜா பூக்கள் மீண்டும் மீண்டும்  பார்க்ககும்  ஆவலைத்  தூண்டும் . அதனாலேயே நான் ப்ளாக் தொடங்கி பதிவு போட ஆரம்பித்தவுடனேயே நம் திண்டுக்கல் பூ மார்க்கட்டைப் பற்றி ஏன் எழுதக்கூடாது எனத் தோன்றியதின் விளைவே இப்புதிய பதிவு (திண்டுக்கல் பூ மார்க்கட் )

                                                           பூ மார்க்கட் முன்புறம்

               திண்டுக்கல் பூ மார்க்கட் பேருந்து நிலையத்திலிருந்து சற்று அருகாமையில் டட்லி பள்ளிக்கு எதிரே அமைந்துள்ளது . முன்பு தனியார் வசம் இருந்த இப்பூ மார்க்கட்  1993 முதல் நகராட்சியால் தத்தெடுக்கப்பட்டு அண்ணா வணிக வளாகம் என்ற பெயரில்  நடத்தப்படுகிறது. இப்பூ மார்கட் காலை 4.30 மணியிலிருந்தே தன் இயக்கத்தை தொடங்குகிறது. சில சமயங்களில் மாலை 8 மணி வரை கூட இங்கு  பூ விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கும். இம்மலர்ச் சந்தை  மேல்தளத்தில்(மாடியில்) இயங்குகிறது.  டட்லி பள்ளியருகே நின்று பார்த்தாலே மேலே ஏறும் படிகளை காணலாம் . படிகளுக்கு கீழேயே ஒரு வயதான தம்பதியர் அமர்ந்து மாலை கட்டி கொண்டிருப்பர் .இவர்கள் மேட்டுபட்டியில் இருந்து  தினமும் இங்கே வந்து பூமாலை  வியாபாரம் செய்கின்றனர் . அவர்களுக்கு சற்று தள்ளி படிகளுக்கு அடியில் இன்னும் சிலர் பூக்களை கட்டிக் கொண்டே விற்ப்பனையும் செய்கின்றனர். இந்த பூ மார்க்கட்டிர்க்கு கீழே செல்போன் சர்வீஸ் கடை, கோ ஆப்டெக்ஸ், காதி கிராப்ட் என நிறைய கடைகள் உள்ளன.

                                             மாலை கட்டும் வயதான தம்பதியர்
     
                                      படிகளுக்கு அருகேயே பூக்கட்டி விற்போர்

                                                    மேலே ஏறும் படிக்கட்டு வழி

                                                  பூ மார்க்கட்டின் பின்புற வழி


                                                  பின்புற வழி படம் இரண்டு (2)

                             இந்த பூ மார்கட்டிற்க்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளன. பின்புறவழி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. அருகிலேயே  அரசு மருத்துவமனை (GH ), அம்மா உணவகம், சிறிய காய்கறி மார்க்கட் என மக்களுக்கு  தேவையான அனைத்தும் அமைந்துள்ளது. பின்புற வழியிலும்  பூ மார்கட்டிற்கு செல்லும்  படிகளுக்கு இருபுறமும் ப்ரஷ் பேக்கரி ,ஜெராக்ஸ் கடை ,முருகன் இட்லிக்கடை, டீக்கடைகள் என நிறைய கடைகள் உள்ளன. இரண்டு வழிகளிலுமே மக்கள் சென்று தங்களுக்கு தேவையான பூக்களை வாங்குகின்றனர் .

                                            பூ மார்கட்டின் பின்புறக் காட்சிகள்

                               பூ மார்க்கட்டின் மாடியில் இருந்து பின்புறம் பார்த்தால்  அரசு மருத்துவமனை (GH),பேருந்து நிறுத்தம், மற்றும் மக்களின் போக்குவரத்துக்களை நன்கு காணலாம்.

                                                      சிறிய காய்கறி மார்க்கட்

                      இந்த காய்கறி கடைகள்  பூ மார்க்கட்டின் இடது புறத்தே உள்ளது. பூ வாங்க வருவோர் தங்களுக்கு தேவையான காய்கறிகளையும் சில சமயம் இங்கே வாங்கி செல்கின்றனர்.

                                விற்பனைக்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள பூக்கள் 


                 குட்டி ஹாலந்து என அழைக்கப்படும் திண்டுக்கல்லில்  பூக்கள் அதிகளவில் உற்ப்பத்தியாகின்றன . திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களான ஏ.வெள்ளோடு , அனுமந்தன்ராயன்கோட்டை ,வடமதுரை, அய்யலூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், ஆவாரம்பட்டி, செந்துறை, மலைகேணி, ராசாக்கப்பட்டி, புகையிலைப்பட்டி, ம.மு.கோவிலூர் ஆகிய பகுதிகளில் பூக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. மல்லி, முல்லை, இருவாட்சி, துளசி, கனகாம்பரம், அரளி, கோழிக்கொண்டை என அனைத்து பூக்களும் உற்ப்பத்தி செய்யப்பட்டு திண்டுக்கல் மலர்ச்சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன . இவை மலேசியா,சிங்கப்பூர்  போன்ற  நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன .

இப்போது பூ மார்க்கட்டின் மேலேறி வருவோம் .....

                                                பூக்களை கட்டிகொண்டிருப்போர்

                   பூமார்க்கட்டின்  படிகளில் ஏறி மேலே சென்றவுடனேயே  சள  சளவென மனிதர்களின் பேச்சு குரல்களும் , பூக்களின் நறுமணமும் வீசி நம்மை அந்த பூ விற்போர் உலகத்திற்குள் வரவேற்ப்பதை போல்  தோன்றும். படி ஏறி முடித்து எதிரே பார்த்தால்  துளசி கட்டுக்கள் மற்றும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் முதலானவற்றை சிலர்  விற்றுக் கொண்டிருப்பர். அங்கிருந்து  சற்றே  இடது புறம் திரும்பி பார்த்தோமானால் பலர் அவரவர்களுக்கு சௌகரியப்பட்ட நிலையில் அமர்ந்து பூக்களை கட்டிக்  கொண்டிருப்பது தெரியும். அவர்கள் யார் ? இப்பூ விற்போர் உலகத்துக்குள்  அவர்களின் பங்கு என்ன ?

                                                                                           தொடர்ந்து விரியும் உலகம் ...

                                                                                                        அடுத்த பதிவில் ....

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பரோட்டா (திண்டுக்கல் அம்மா மெஸ் )

பரோட்டா பார்சல்
       
                    அன்று ஒரு சனிக்கிழமை நாள், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால் குடும்பத்தில் அனைவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். என்ன சமைப்பது என யோசிக்க அனைவருக்கும் வீட்டு  சமையல் போரடித்ததால் பரோட்டா வாங்கி சாப்பிடலாம் என முடிவு செய்தோம். எங்கே வாங்குவது என யோசித்தபோது தெரிந்தவர் ஒருவர் அம்மா மெஸ்ஸில் நன்றாக இருக்கும் என சொன்னது நினைவு வர அங்கேயே வாங்கலாம் என முடிவு செய்து பரோட்டாவும் கரண்டி எனப்படும் முட்டை பதார்த்தமும் பார்சல் வாங்கினோம் .


   பரோட்டா சால்னா

                           பரோட்டா வாங்கியதும் வீட்டுக்கு சென்று அனைவரும் வட்டம் கூடி  அமர்ந்து ருசித்தோம். சேர்ந்து அமர்ந்து உண்ணும் போது எந்த உணவுமே சுவையாகவே இருக்கும். அதிலும் பரோட்டாவை  சாப்பிடும் போது மிகவும் சுவையாகவே இருந்தது. பொதுவாகவே  ரயில் பயணத்தின் போது பரோட்டா வாங்கி சென்று ரயிலில் அமர்ந்து சாப்பிடுவதை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு முறை திண்டுக்கல்லில் இருந்து மைசூருக்கு இரயிலில் செல்லும் போது நான் மட்டுமல்லாது பலரும் பரோட்டா வாங்கி வந்து உண்பதை பார்த்து ரசித்திருக்கிறேன். பரோட்டா என்பது அனைவரையும் கவரக்கூடிய உணவாக இருந்தாலும் திண்டுக்கல்லில் பிரியாணி மிகவும் பிரபலமானஉணவு வகையாகும்.

                                                                        கரண்டி

                       இந்த மெஸ்ஸில் பரோட்டாவோடு கூட  கரண்டி மிகவும் சுவையாக இருந்தது. பொதுவாக கரண்டி என்பது ஒவ்வொரு ஊரிலும் கலக்கி, போட்டி,ஆம்லட் என ஒவ்வொரு பெயரில் சொல்லப்படுகிறது. இதில் முட்டையுடன் வெங்காயம் மற்றும் சிலது  சேர்த்து குழி கரண்டி மாதிரி ஒன்றில் ஊற்றபடுகிறது. நான் சிறு வயதாய் இருந்த போது வீட்டில் என் அம்மா சாம்பிராணி போடும் குழி கரண்டி வைத்து  முட்டையை இப்படி உடைத்து ஊற்றுவார்கள். அது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


                                               பரோட்டவுடன் 2 வகை  சால்னா

                       இங்கு பரோட்டவுடன் இரண்டு வகை சால்னா தரப்படுகிறது .ஒன்று கறி  மசாலா குழம்பு சுவையிலும், மற்றொன்று தக்காளி சேர்த்து சற்று புளிப்புடன் கூடிய ருசியாகவும் உள்ளது .இரண்டு குழம்பையும் பரோட்டவுடன் சேர்த்து பிசைந்து கரண்டியுடன் சாப்பிட சுவையாக இருந்தது .

                                                             நாட்டுகோழி கிரேவி
                                         
                              அம்மா மெஸ் திண்டுக்கல் காட்டாஸ்ப்பத்திரி ரோட்டில் உள்ளது .இங்கு பணியாளர்கள் சீருடையணிந்து வேலை செய்கின்றனர் .பரோட்டா ஒன்று 13 ரூபாய் என விற்கப்படுகிறது .இங்கு பரோட்டாவை விட நாட்டுக்கோழி கிரேவி நன்கு விற்பனையாகிறது.அனைவரும் இதை பார்சல் வாங்கி செல்கின்றனர்.

                                 பரோட்டா என்பது சிலருக்கு அன்றாட உணவாகவும், பலருக்கு வீட்டு சாப்பாடு போரடிக்கும் போது  வாங்கி சாப்பிடும் உணவாகவும் உள்ளது. பொதுவாகவே பரோட்டா என்பது அனைவருக்கும் பிடித்த உணவாகும். திண்டுக்கல்லில் பரோட்டா 5 ரூபாயிலிருந்து 13 ரூபாய் வரை பல உணவகங்களில் பல வித சுவையில் விற்கப்படுகிறது .அதைப் பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

                                                                                             

                                                                              பரோட்டா பார்சல் தொடரும்....

புதன், 4 நவம்பர், 2015

சிறுமலைக்கு போவோமா ?

இனிமையான சிறுமலை பயணம்





,aw;ifia ms;spg;gUFk; tpopfNshL vspikAk; ,dpikAk; fye;j kdJld; gazk; nra;a tpUk;GgtHfs; nry;y Ntz;ba ,lk; jpz;Lf;fy; khtl;lj;jpy; cs;s rpWkiyahFk;. jpz;Lf;fy; khtl;lj;jpy; ,Ue;J 1 kzp Neu gaz Jhuj;jpy;(25
km) 18 nfhz;il Crp tisTfSld; $ba rpW kiyahFk;.Rw;Wyh gazpfs; mjpfk; rQ;rhpf;fhj ,lkhjyhy; Rw;Wg;Gwj; Jha;ikAld; uk;kpakhf fhl;rpaspf;fpwJ.
jpz;Lf;fy; g]; ];lhz;bypUe;J 5km Jhuj;jpy; thiof;fhgl;bf;F mLj;jjhf rpWkiyg;gphptpy; rpwpJ Jhuk; nrd;why; rpWkiy mbthuk; Muk;gpf;fpwJ. ,q;F tdj;Jiw nrf; Ngh];l; xd;W cs;sJ. ,q;fpUe;Nj rpWkiyg; gazk; Muk;gpf;fpwJ. 1992, 94, 98y; rpWkiyf;F mt;tsthf NgUe;J trjp ,y;;iy. jw;NghJ nghJ kf;fspd; trjpf;fhf ,q;F nry;tjw;f;F 45 to 1 kzp Neuj;jpw;f;F xUKiw muR kw;Wk; jdpahH g]; ,aq;FfpwJ. ,e;j NgUe;J njd;kiy tiu nry;fpwJ

அbthuj;jpypUe;J NgUe;jpy; Rw;wpYk; cs;s ,aw;if fhl;rpfis urpj;jgbNa nrd;why; rpWkiyapy; ehk; Kjypy;; milaf;$ba epWj;jk; mz;zh efh; mLj;jjhf gioa+H, GJhH, mf];jpaHGuk;, nts;spkiy rptd; Nfhtpy; cs;sJ. ,k;kiyiar; Rw;wp jhof;fil, Ntshz;fhL, musf;fhL, flkhd;Fsk; Mfpa kiy fpuhkq;fs; cs;sd.,jpy; jhof;filf;F g]; trjp ,y;iy. Mjpthrpfshd G+Ht Fbfs; ,q;F njd;kiy Cuzp, nghd;dUtp, rpWkiyg;GJhH, njhOf;fhL gFjpfspy; fhl;Lf;Fs; Fbir Nghl;L trpf;fpd;wdH.

,k;kiyf;F NghFk; topapy; fUg;gz rhkp kw;Wk;; khjh Nfhtpy;fs; cs;sd. rpWkiyapy; rhj;ijahW, re;jhdth;j;jpdp MWfs; cw;g;gj;jpahfpd;wd. ,k;kiyg;gFjpapy; cs;s jhof;fil topahf fhl;Lg;ghijapy; ele;J nrd;why; kJiu thbg;gl;bia milayhk;.

,jidg; gw;wpAk; kw;w Rw;wp ghHf;Fk; ,lq;fisg; gw;wpAk; mLj;j gjptpy; ghHf;fyhk;.

                                                 njhlUk;……..