கோன் கேக் வெளியே கோன் மொறு மொறுவென்று இருக்க உள்ளே உதிரியாக கேக் துகள்களை அடைத்து வாய்ப்புறத்தை இனிப்பான கிரீமினால் பூசியிருப்பர். இந்த கோன் கேக் திண்டுக்கல்லில் உள்ள சிலோன் பேக்கரி என்ற பெயரில் பல வருடங்களாக செயல்படும் இக்கடையில் மிகவும் சுவை பட தயாரிக்கப்பட்டிருக்கும்.
கோன் கேக்
கோனுடன் உள்ளே இருக்கும் கேக்கை கிரீமுடன் சேர்த்து ஒரு கடி கடித்து சுவைக்க அடுத்த கடிக்கு கையில் கோன் கேக் இருக்கிறதா என தெரியாத அளவில் வேகமாக காலியாகியிருக்கும். கோனின் உள்ளே இருக்கும் கேக்கை மட்டும் தனியே எடுத்து சாப்பிட சுவை சூப்பர்.
கோன் உள்ளே
கோனில் உள்ளே வைப்பதற்கென்றே காப்பி கலரில் மிதமான இனிப்பில் செய்த கேக்குடன் டூட்டி புரூட்டி எனப்படும் பப்பாளியால் கலர் கலராக தயாரிக்கப்படும் ஒரு வித இனிப்பு சுவையையும் இதனுடன் சேர்த்து கோனில் உள்ளே அடைத்திருப்பர் .
இந்த டூட்டி புரூட்டி பல வித கேக்குகளிலும், பண்ணிலும் சுவைக்காக சேர்க்கப்படும் ஒன்றாகும்.
கோன் உள்ளே (படம் -2)
கோன் கேக்கை வாங்க வேண்டுமென்றால் சிலோன் பேக்கரிக்கு மாலை 4 மணிக்கு செல்ல வேண்டும். இங்கு இந்த கேக் மிகவும் சுவைபட தயாரித்திருப்பதால் (ஒரு மணி நேரத்திலேயே) மாலை 5 மணிக்கே விற்றுத் தீர்ந்து விடுகிறது.
ஸ்வீட் பப்ஸ்
இங்கு கோன் கேக் மட்டுமல்லாது பல சுவைகளிலும், வண்ணங்களிலும் கேக்குகள் விற்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ், புது வருட நாட்களில் இங்கு கேக் வாங்க கூட்டம் அதிகளவில் இருக்கும்.
வெஜ் பப்ஸ்
இங்கு கேக்குகள் மட்டுமல்லாது பப்ஸ்களும் வித விதமாக காளான் ,வெஜிடபிள், சிக்கன், முட்டை பப்ஸ் என தயாரிக்கப்பட்டு உடனே விற்று தீர்ந்து விடுகிறது. லட்டு, மைசூர் பாகு, சில்லி பிரட், ரோல் கேக், சூஸ்பரி என அனைத்து இனிப்புகளும் சுவையாக இருக்கும்.
சூஸ்பரி
சிலோன் பேக்கரி எனும் இக்கடை திண்டுக்கல் கடை வீதியில், வெள்ளை விநாயகர் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.
Wow.superb cone cake is my favourite item in my childhood.every time I came to India i was eaten that.tks a lot for ur post to recall my childhood memories
பதிலளிநீக்குThanks for your Comments Karthik...
பதிலளிநீக்கு