நவராத்திரி சிறப்புகள்
கொலு அலங்காரம் காட்சி -2
கொலு அலங்காரம் காட்சி -3
கொலு அலங்காரம் காட்சி -4
கொலு அலங்காரம் காட்சி -5
கொலு அலங்காரம் காட்சி -6
கொலு அலங்காரம் காட்சி -7
கொலு அலங்காரம் காட்சி -8
வீணை கோலம்
மாலைகள்
மூன்று தேவியர்கள்
திண்டுக்கல் மாநகருக்கே சிறப்பு சேர்க்கும் அபிராமி அம்மன் கோவிலுக்கு நவராத்திரியின் போது சென்றிருந்தோம். நவராத்திரி ஒன்பது நாளும் பாட்டு கச்சேரி, வீணை கச்சேரி, நாட்டியம் என பலவித நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி விழா பக்தர்களை கவர்ந்திழுத்தது. பல வருடங்களாக திண்டுக்கல்லின் மையப்பகுதியான கடை வீதியில் அபிராமி அம்மன் காளஹத்திஸ்வரருடன் அருள் பாலிக்கிறார். இக்கோயில் சமீபத்தில்தான் அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கொலு மண்டபத்தில் நடராஜர்
கோவிலில் நாயன்மார்கள் வரிசைக்கு பக்கமாக உள்ள இடத்தில் இந்த வருடம் கொலு மண்டபம் அலங்கரிக்கப்பட்டது. அழகிய நடராஜருக்கு தனியாக மேடை அமைக்கப்பட்டு அருள் பாலிக்கிறார் .
கலைமகள் அலங்காரத்தில் அம்மன்
இருபுறமும் கொலு படிக்கட்டுகளுக்கு நடுவே அம்மன் வீணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து ஞான நெறியை நம்மில் ஊட்டுகிறார்.
கொலு அலங்காரம்
கொலு படிக்கட்டுகளில் திருப்பதி ஏழுமலையான் ஆரம்பித்து வரிசையாக பகவான் விஷ்னுவின் அவதார சொரூபங்களும், சிவ லிங்கமும், அம்பிகைகளும் அருள் காட்சியருளிகின்றனர்.
கொலு படிக்கட்டுகளுக்கு கீழே நாட்டிய பொம்மைகள், பூரண கும்பம், காய்கறிகள் என அழகு செய்யப்பட்டுள்ளன.
கொலு அலங்காரம் காட்சி -3
கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறத்தே அம்மன், நந்தி தேவர் முதலான விக்ரகங்கள் ஒரு சிறு மேடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் 4.30 மணிக்கே கோவிலுக்கு சென்றதால், விளக்கு வெளிச்சத்துக்கு முன்னதான கொலு படிக்கட்டுகளையும் சேர்த்து காட்சிக்கு பதிவு செய்தோம்.
கொலு படிக்கட்டுகளுக்கு இடப்புறம் நந்தி தேவர் முதலான விக்கிரகங்களுக்கு சற்றுத் தள்ளி மற்றைய ஏனைய உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கொலு அலங்காரம் காட்சி -5
கொலுவில் வீற்றிருக்கும் அம்மனையும், நடராஜரையும் , கொலுவுக்கு அலங்கரிக்கும் ஐயர்கள்.
சீரியல் பல்புகள் அலங்கார வெளிச்சத்தில் மின்னும் கொலு விக்கிரகங்கள்.
வீணை கோலம்
கொலு படிக்கட்டுகளுக்கு முன் புறத்தே போடப்பட்டுள்ள வீணை கோலம். இது போல் தினமும் ஒரு கோலம் வரையப்பட்டு கொலுவிற்கு அழகு சேர்த்தது.
அம்மனுக்கு அலங்காரம் செய்ய பல நிற மலர்களால் தொடுக்கப்பட்டு காத்திருக்கும் மாலைகள்.
கொலு அலங்காரம் காட்சி -9
இரண்டு கொலு படிக்கட்டுகளுக்கும் நடுவே ராதா கிருஷ்ணரும், சுற்றிலும் சிறிய அளவில் கிருஷ்ணர் மற்ற பொம்மைகளும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டு பார்த்துக் கொண்டேயிருக்க தூண்டுகிறது. பலரும் கொலுவை பார்த்து ரசித்ததோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டிருந்தனர்.
நவராத்திரி முடிந்து பத்தாவது நாள் கோவிலில் நிறைவாக சண்டி ஹோமம் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு யாகத்தில் எழும் புகை நம் மீது படுவது சகல நன்மைகளையும் கொண்டு தரும் என்பர்.
மூன்று தேவியர்கள்
அபிராமி அம்மன் கோவிலுக்கு சற்றுத் தள்ளி உள்ள வாசவி மஹாலிலும் கொலு பார்க்க சென்றோம். அங்கு சரஸ்வதி முதலான மூன்று தேவியர்களும் சர்வாலங்காரத்துடன் அருள் காட்சியளித்தனர். அவர்களை வணங்கி விட்டு அருகே பொங்கல், புளியோதரை பிரசாதத்தை வாங்கி சுவைத்து விட்டு வீட்டுக்கு திரும்பினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன