சனி, 19 நவம்பர், 2022

நம்ம ஊரு செட் பரோட்டா

                                  பரோட்டாவை தினம் தினம் ரசித்து ருசித்துச்  சாப்பிடும் பரோட்டா பிரியர்களுக்காகவே இந்தப் பதிவு. சென்ற முறை நமது பரோட்டா பதிவில் வாழை இலை பரோட்டா விருந்து பரிமாறினோம். இம்முறை செட் பரோட்டா சாப்பிடுவோமா?


                                         நாம் விரும்பி சாப்பிடும் பரோட்டாக்களில்தான் எத்தனை வகையான ருசிகள் நமக்கு நாள்தோறும் அறிமுகப்படுத்தப்படுகின்றன? ஆஹா பரோட்டா என சொல்லும் போதே நாவூறுகிறதே. சிலோன் பரோட்டா, விருதுநகர் பரோட்டா, நத்தம் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, மலபார் பரோட்டா  என ஊரின் பெயராலேயும், தேசத்தின் பெயராலேயுமே பல வகையான பரோட்டாக்கள். 


                               நம்மில் பலருக்கும் அறிமுகமான செட் பரோட்டாவை சுவைக்க கடைக்குச்  சென்றோம். நமது ஊரில் பேகம்பூர் மற்றும் பல ஏரியாக்களில் இந்த பரோட்டா கிடைக்கிறது. கடைக்கு அருகே நெருங்கும் போதே சால்னா வாசம் காற்றில் மிதந்து வந்து நமது நாசியைத் துளைத்தது. 


                             என்னதான் செட் பரோட்டாவை சுவைப்பதற்காகவே அந்தக்  கடைப்பக்கம் சென்றாலும் காற்றில் மிதந்து வந்த சால்னாவின் மணம் நமக்கு சாதா பரோட்டாவும் வாங்கி அதில் சால்னாவை ஊற வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே வயிறு பசியைத் தூண்ட சாதா பரோட்டாவும் ஆர்டர் செய்தோம்.
 

                                கடையில் அமர்ந்த உடனேயே சாதா பரோட்டா, நாட்டுக்கோழி சால்னா சொல்லி விட்டு அமர்ந்தோம். சால்னா கிண்ணத்திலும், பரோட்டா இலையிலும் வந்து அமர பரோட்டாவை உடனடியாக பிய்த்துப்  போட்டு, சால்னாவில் மூழ்கடித்து ஒரு வாய் எடுத்துச்  சுவைக்க ஆஹா .. அற்புதம் என மனம் கூவியது.


                           அடுத்ததாக செட் பரோட்டாவை கொண்டு வந்து நமது இலையில் பரிமாறினர். சாதா பரோட்டாக்களை மிக்ஸியில் அரைத்து அதை ஒரு சிறிய தட்டில் இட்டு அதில்  மட்டன் சால்னாவை ஊற்றி மூழ்கடித்து, நன்றாக மட்டன் சால்னாவில் ஊறிய பரோட்டாவின் மீது ஆங்காங்கே மட்டன் துண்டுகளை இட்டவுடன், சூடான செட் பரோட்டா ரெடி.


                                         செட் பரோட்டாவை நமது இலையில் வைத்தவுடனேயே சிறிது நேரம் அதனை ரசித்து விட்டு, அதன் மணத்தை நன்றாக நுகர்ந்து விட்டு வாய்க்குள் வைத்தவுடனேயே செட் பரோட்டா உடனடியாக வாய்க்குள் கரைந்து காலியானது. மணமும், சுவையுமான  செட் பரோட்டாவை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் பார்சல் செய்தோம்.


                            பரோட்டாவை சாப்பிட்டு விட்டு ஆம்லெட் சுவைக்கவில்லையானால் எப்படி எனத் தோன்ற அதையும் சேர்த்துச்  சுவைத்தோம்.


                                     நாட்டுக்கோழி கிரேவி இலையில் பார்க்கும் போதே ருசிக்கத் தூண்டுகிறதல்லவா? அதனை பரோட்டாவுடனும், சுடச்சுட ஆம்லேட்டுடனும் சேர்த்துச்  சாப்பிட சுவை தூக்கியடித்தது.

                                      செட் பரோட்டாவையும், சாதா பரோட்டாவையும் நன்றாக ரசித்து சாப்பிட்டு விட்டு வீட்டுக்கும் நாட்டுக்கோழி சால்னாவுடன் பார்சல் கட்டிச் சென்றேன். வீட்டில் குழந்தைகள் ரசித்துச் சாப்பிட நானும் இன்னொரு முறை செட் பரோட்டாவை  சிறிது எடுத்து ருசித்தேன். நீங்களும் ஒரு முறை சுவை மிகுந்த செட் பரோட்டா வாங்கி ருசியுங்கள் உறவுகளே...


பரோட்டா பதிவு தொடரும்....
2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. புரோட்டாவை அரைத்து அதில் ஒரு ஒரு உணவு உள்ளது என்பதை இன்று தங்கள் பதிவு மூலமாக தெரிந்து கொண்டேன். தங்கள் பதிவுகள் தொடரட்டும் 👏👏👏

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார் ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன